விபத்தில் சிக்கி படுத்த படுக்கையானேன், நடக்க முடியாமல்... அதிர்ச்சி தகவலை கூறிய நடிகை சினேகா
நடிகை சினேகா
தனது சிரிப்பின் அழகில் மக்களை மயக்கும் நடிகை தான் சினேகா.
புன்னகை அரசியாக மக்களால் கொண்டாடப்படும் இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். டாப்பில் இருந்த போதே சக நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர், குழந்தைகள் கொஞ்சம் வளர மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார் நடிகை சினேகா. அதேசமயம், படங்களில் நடிப்பதை தாண்டி சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்தார்.
சினிமாவை தாண்டி சொந்தமாக புடவை கடை திறந்து அதிலும் சாதனை செய்து வருகிறார்.

அதிர்ச்சி தகவல்
சமீபத்தில் ஒரு விருது மேடையில் நடிகை சினேகா ஒரு ஷாக்கிங் தகவல் கூறியுள்ளார்.
அதில் அவர், நான் சினிமாவுக்கு வந்த புதிதில் 3 வருடத்திலேயே ஒரு மிகப்பெரிய விபத்தில் சிக்கினேன். அந்த விபத்தில் கை, கால், முதுகு என அனைத்து இடங்களிலும் அடிபட்டு விட்டது, நான் எழுந்து நடக்கவே 8 மாதத்திற்கு மேல் ஆகும் என சொன்னார்கள்.

அந்த நேரம் கரு.பழனியப்பன், பார்த்திபன் கனவு பட கதையை கூறினார், நான் நடக்கவே முடியாமல் இருக்கிறேன், எந்த நம்பிக்கையில் கதை கூறுகிறீர்கள் என்றேன். அவர் உடனே அதெல்லாம் இன்னும் ஒரு மாதத்தில் நடுந்துடுவீங்க என்றார்.

அவர் கொடுத்த தைரியம் தான் என்னை அன்று நடக்க வைத்தது என கூறியுள்ளார்.
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri