புன்னகை அரசி, தளபதி 68 பட நாயகி சினேகாவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
நடிகை சினேகா
சுஹாசினி என்ற தனது பெயரை மாற்றி சினேகா என்ற பெயருடன் தமிழில் அறிமுகமானார் நடிகை.
சுசி கணேசன் இயக்கிய விரும்புகிறேன் என்ற படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான சினேகாவுக்கு முதல் படமே தாமதம் ஆனது, அதன்பின் மாதவனுடன் என்னவளே திரைப்படத்தில் நடித்தார், அதுவே அவரது முதல் படமாக அமைந்தது.
அஜித்தின் ராஜா பட நடிகை பிரியங்காவை நியாபகம் இருக்கா?- ஆளே மாறி எப்படி இருக்காங்க பாருங்க, லேட்டஸ்ட் போட்டோ
பின் ஆனந்தம், பம்மல் கே சம்மந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ், வசீகரா, உன்னை நினைத்து, ஜனா, ஆட்டோகிராப், பிரிவோம் சந்திப்போம் 10 வருடங்கள் டாப் நாயகியாக வலம் வந்தார்.
அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்தபோது நடிகர் பிரசன்னாவுடன் காதல் ஏற்பட பெற்றோர்கள் சம்மதத்துடன் 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஹான் என்ற மகனும், ஆதியந்தா என்ற மகளும் உள்ளனர்.
சொத்து மதிப்பு
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என கலக்கிய சினேகா திருமணத்திற்கு பிறகும் படங்கள் நடித்து வருகிறார். இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் நடுவராக கலக்க வருகிறார்.
இப்படி நடிப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சி, விளம்பரங்கள் என இப்போதும் கலக்கிவரும் நடிகை சினேகாவின் சொத்து மதிப்பு ரூ. 45 கோடி முதல் ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.