நடிகையை தாண்டி புதிய தொழில் தொடங்கிய நடிகை சினேகா- குவியும் வாழ்த்துக்கள்.

By Yathrika Feb 08, 2024 06:30 AM GMT
Report

நடிகை சினேகா

மாதவனின் என்னவளே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சினேகா.

லிங்குசாமி இயக்கத்தில் இவர் நடித்த ஆனந்தம் திரைப்படம் சினேகாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

பின் சூர்யாவுடன் உன்னை நினைத்து, கமலின் பம்மல் கே சம்பந்தம், விஜய்யுடன் வசீகரா, அஜித்துடன் ஜனா என அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்து நடித்து உயர்ந்தார்.

தமிழகத்தில் வெற்றிகரமாக கட்சியை தொடங்கிய விஜய்- அரசியலில் அடுத்து அவரது அதிரடி

தமிழகத்தில் வெற்றிகரமாக கட்சியை தொடங்கிய விஜய்- அரசியலில் அடுத்து அவரது அதிரடி

கடந்த 2009ம் ஆண்டு வெளிவந்த அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படம் சினேகாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமைந்தது. காரணம் இப்படத்தின் மூலம்தான் சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

நடிகையை தாண்டி புதிய தொழில் தொடங்கிய நடிகை சினேகா- குவியும் வாழ்த்துக்கள். | Actress Sneha Stepping Into New Business

திருமணம்

கடந்த 2012ம் ஆண்டு குடும்பத்தின் சம்மதத்துடன் சினேகா-பிரசன்னா திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது சினேகா சொந்தமாக சினேகாலயா சில்க்ஸ் என்கிற துணிக்கடை ஒன்றை புதிதாக திறக்க உள்ளார்.

திறப்பு விழா வருகிற பிப்ரவரி 12ம் தேதி நடைபெற உள்ளதாம், அழைப்பிதழ்களை பிரபலங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார் சினேகா. 

நடிகையை தாண்டி புதிய தொழில் தொடங்கிய நடிகை சினேகா- குவியும் வாழ்த்துக்கள். | Actress Sneha Stepping Into New Business

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US