கார்த்திகை தீபம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை... ஸ்பெஷல் என்ட்ரி
கார்த்திகை தீபம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது கார்த்திகை தீபம்.
கடந்த 2022ம் ஆண்டு கார்த்திக் ராஜ்-அர்த்திகா ஜோடியாக நடிக்க தொடங்கப்பட்டது, முதல் பாகமே சூப்பராக ஒளிபரப்பாக இரண்டாவது பாகம் தொடங்கப்பட்டது. அதில் கார்த்திக் ராஜ் மற்றும் வைஷ்ணவி சதீஷ் ஜோடியாக நடித்து வருகின்றனர்.
இதுவரை 1102 எபிசோடுகள் ஓடியுள்ளது, கதையும் விறுவிறுப்பு குறையாமல் ரசிகர்களின் பேராதரவுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஸ்பெஷல்
இப்போது கதையில் கல்யாண கதைக்களம் தான் ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த திருமணத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வருவது தெரிகிறது, இப்படி பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் கார்த்திகை தீபம் தொடரில் ஒரு நடிகை ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
அவர் வேறுயாரும் இல்லை நடிகை சோனா தான் காயத்ரி தேவி என்ற கதாபாத்திரத்தில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்கிறார். அதிரடியாக களமிறங்கும் காயத்ரி தேவி திருமண விஷயத்தில் கார்த்திக்கு உதவ வருகிறார்.