என்னுடைய திருமணம் அவருடன் தான், ஓபனாக கூறிய நடிகை ஸ்ரீதிவ்யா- யார் அவர் தெரியுமா?
நடிகை ஸ்ரீதிவ்யா
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹிட் படங்களில் ஒன்று வருத்தப்படாத வாலிபர் சங்கம், இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா.
முதல் படத்திலேயே நம்ம வீட்டு பொண்ணு என்ற இமேஜை பெற்ற இவர் மீண்டும் அவருடனே ஜோடி சேர்ந்து காக்கி சட்டை என்ற படத்தில் நடித்தார். பின் ஜீவா, ஈட்டி, மருது, பெங்களூரு நாட்கள், பென்சில் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
பின் என்ன காரணம் என தெரியவில்லை 5 வருடங்களுக்கு மேலாக ஸ்ரீதிவ்யா எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார். நீண்ட இடைவேளைக்கு பின்னர் தமிழில் தற்போது ரெண்டு என்கற படத்தில் நடித்துள்ளார்.

திருமணம் பற்றி நடிகை
இந்த நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை ஸ்ரீதிவ்யாவிடம் உங்களது காதலன் யார், யாரை திருமணம் செய்ய போகிறீர்கள் என பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு அவர் எனக்கு கண்டிப்பாக காதல் திருமணம் தான், என்னுடைய காதலனை தான் திருமணம் செய்துகொள்வேன் என தெரிவித்துள்ளார். ஆனால் யார் அவர், எப்போது திருமணம் என்பதை எல்லாம் அவர் கூறவே இல்லை.

யூடியூப் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு அதிர்ச்சி செய்தி - இரட்டிப்பாக்கப்பட்ட தகுதி வரம்பு News Lankasri
மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான அறிவிப்பு: பணியாளரின் ஆர்வத்தால் உருவான குழப்பம் News Lankasri