அம்மா மஞ்சுளா இறந்த பிறகு அக்கா ப்ரீத்தா இப்படியெல்லாம் செய்தார்- எமோஷ்னல் விஷயங்களை கூறிய ஸ்ரீதேவி

Yathrika
in பிரபலங்கள்Report this article
விஜயகுமார்
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் தொடங்கி இப்போது வரை நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஜயகுமார்.
கதாநாயகனாக நடிக்க தொடங்கினாலும் அதிகம் குணச்சித்திர வேடங்களிலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார். விஜயகுமாரை தொடர்ந்து அவரது இரண்டாவது மனைவி மஞ்சுளா, மகன், மகள்கள் அனைவருமே சினிமாவில் நடித்துள்ளனர்.
விஜயகுமார், முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்த நிலையில் அவருக்கு அனிதா, கவிதா, அருண் விஜய் என 3 குழந்தைகள் இருந்த நிலையில் அவரை விவாகரத்து செய்தார்.
பின் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்த விஜயகுமாருக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என 3 மகள்கள் பிறந்தனர்.
ஸ்ரீதேவி பேச்சு
மறைந்த நடிகை மஞ்சுளாவின் மகள் ஸ்ரீதேவி ஒரு பேட்டியில், அம்மாவின் இறப்பிற்கு பிறகு நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டோம். அந்த வேதனையில் இருந்து வெளியே வருவதற்கு என்னுடைய அக்கா தான் உறுதுணையாக இருந்தார்.
கல்யாணத்துக்கு பிறகு நான் கர்ப்பமானதும் அந்த நேரத்தில் அம்மாவுடைய நினைவு எனக்கு அதிகமாக வந்தது. ஆனால் அம்மா இல்லாத கஷ்டம் வரக்கூடாது என்பதற்காக என்னை பார்த்துக்கொண்டது அக்கா ப்ரீத்தா தான்.
அதுபோல என்னுடைய மகள் எனக்கு எங்க அம்மாவின் மறு உருவமாகத்தான் கிடைத்திருக்கிறார் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.