தனது மகளின் 10வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ஸ்ரீதேவி... போட்டோஸ் இதோ
நடிகை ஸ்ரீதேவி
நடிகர் விஜயகுமார் மகள் என்ற அங்கீகாரத்துடன் தமிழ் சினிமாவில் நாயகியாக என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி.
தமிழில் காதல் வைரஸ் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார், பின் தேவதையை கண்டேன், தித்திக்குதே, பிரியமான தோழி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்தார்.

ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய 2009ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து செட்டில் ஆனார், இவர்களுக்கு ரூபிகா என்ற மகள் உள்ளார்.
கொண்டாட்டம்
இடையில் மீடியா பக்கம் வராமல் இருந்த ஸ்ரீதேவி இப்போது சின்னத்திரையில் களமிறங்கி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சிகளிலும் நடுவராக கலக்கி வருகிறார்.

இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் ஸ்ரீதேவி தனது மகள் ரூபிகாவின் 10வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.






மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri