மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தங்கையை பார்த்துள்ளீர்களா?- அக்காவை போல அவரும் அழகாக உள்ளாரே, இதோ போட்டோ
நடிகை ஸ்ரீதேவி
ஒரு காலத்தில் தமிழை தாண்டி இந்திய சினிமாவை ராஜ்ஜியம் செய்துகொண்டிருந்தவர் நடிகை ஸ்ரீதேவி.
இந்தியா முழுவதும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். இவர் 2018ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி துபாயில் ஒரு ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தார்.
எப்போதும் உடலை பிட்டாக வைத்துக்கொள்ளும் நடிகை ஸ்ரீதேவியா இறந்தார் என இந்திய சினிமா துறையினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
நடிகை ஸ்ரீதேவி இறந்து பல வருடங்கள் ஆகியும் அவரை பற்றி பேசாதவர்கள் இல்லை என்றே கூறலாம். இவரது கணவர் போனி கபூர் தமிழ் சினிமா பக்கம் வந்து நேர்கொண்ட பார்வை, வலிமை என அடுத்தடுத்து அஜித்தை வைத்து படங்கள் தயாரித்துள்ளார்.
ஸ்ரீதேவியின் முதல் மகள் ஜான்வி கபூர் தனது அம்மாவை போல நாயகியாக வலம் வருகிறார். ஹிந்தியில் படங்கள் நடித்து வந்தவர் தற்போது தெலுங்கு, தமிழ் சினிமா படங்களிலும் அதிகம் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அன்ஸீன் போட்டோ
நாம் நடிகை ஸ்ரீதேவியின் கணவர், மகள்களை அதிகம் பார்த்திருக்கிறோம், ஆனால் அவரது தங்கை ஸ்ரீலதாவை பார்த்திருக்க மாட்டோம்.
தற்போது சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ரீதேவி இளமை காலத்தில் தனது தங்கை ஸ்ரீலதாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் ஒன்று வைரலாகி வருகிறது.
நடிகை ஸ்ரீதேவியை போல அவரது தங்கையும் அழகாக உள்ளாரே என ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

நான் பிரபுதேவாவின் ரசிகை; அதுக்காக இதை ஏற்க முடியாது - நடிகை சிருஷ்டி டாங்கே பகீர் புகார் IBC Tamilnadu
