இளம் வயதில் தங்கல் பட நடிகை மரணம்!! அதிர்ச்சியில் திரையுலகம்
சுஹானி பட்னாகர்
கடந்த 2016 -ம் ஆண்டு அமீர் கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படம் மல்யுத்த வீராங்கனைகள் கீதா போகத் மற்றும் பபிதா போகத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான படமாகும்.
இதில் பபிதா போகத்தின் இளம் வயது கதாபாத்திரத்தில் சுஹானி பட்னாகர் நடித்திருப்பார். இவர் ஹிந்தியில் பல திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்திருக்கிறார்.
மரணம்!!
கடந்த ஆண்டு இவருக்கு விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அந்த விபத்தின் பக்க விளைவுகளால் காரணமாக சுஹானி உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கிறதாம். இதனால் சில நாட்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து இருக்கிறார்.
இந்நிலையில் 19 வயதான சுஹானி பட்னாகர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு பாலிவுட் திரையுலகை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.