நடிகர் சரத்பாபுவிற்கு இப்படிபட்டடி நோய் இருந்ததா?- நடிகை சுஹாசினி கூறிய தகவல்
நடிகர் சரத்பாபு
தென்னிந்திய திரையுலக நடிகர் சரத்பாபு. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
இவர் தெலுங்கு திரையுலகில் 1973இல் அறிமுகமாகி பின் தமிழ் திரையுலகில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமானார்.
200க்கும் மேற்பட்ட படங்களில் துணைநடிகராக நடித்துள்ளார். தற்போது அவர் இறந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அவர் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த சுஹாசினி கூறியதாவது: சரத் பாபு கடந்த 92 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், அவருக்கு மல்டிபிள் மைலோமா என்ற நோய் உள்ளதாக கூறினார்.
சரத் பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் சிரஞ்சீவியுடன் சென்று மருத்துவரை சந்தித்தனர். மருத்துவர் சரத் பாபு கடைசி கட்டத்தில் உள்ளதாக சொல்லியிருந்தார்.
அதன் பின் மருத்துவர் சிகிச்சை பலனின்றி 22 மே மதியம் 1:30 மணி அளவில் காலமாகியுள்ளார். சரத் பாபுவிற்கு மனதில் ஒரு தனி இடம் என்றும் எந்த ஒரு கெட்ட பழக்கம் இல்லாத ஒரு உன்னதமான நடிகர் என செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.