படங்களில் பார்க்கும் கவுண்டமணி நிஜத்தில் கிடையாது- உண்மையை கூறிய நடிகை சுகன்யா
சுகன்யா
பாரதிராஜாவால் 1991ம் ஆண்டு புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை சுகன்யா.
அதன்பின் கோட்டைவாசல், செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல், கருப்பு வெள்ளை, தாலாட்டு, கேப்டன், வண்டிச்சோலை சின்ராசு, மகாநதி, மிஸ்டர் மெட்ராஸ், மகாபிரபு, இந்தியன், சேனாபதி என தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தார்.
சின்ன கவுண்டர் படத்தில் நடிகர் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்து சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார்.
அதோடு அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த கமல், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக் என பலரது படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
நடிகையின் பேட்டி
அண்மையில் நடிகை சுகன்யா ஒரு பேட்டியில் கவுண்டமணி குறித்து பேசியுள்ளார். அதில் அவர் பேசும்போது, நீங்கள் சினிமாவில் பார்ப்பது போல கவுண்டமணி சார் கிடையாது.
சினிமாவில் அவர் காமெடியாக பேசிக் கொண்டிருந்தாலும் நிஜத்தில் அவருக்கு சினிமாவை பற்றி அவ்வளவு அறிவு இருக்கிறது.
நிறைய ஆங்கில படங்களை பார்ப்பார், ஆங்கில நடிகைகள் குறித்து பேசுவார். நடிப்பை தாண்டியும் கவுண்டமணிக்கு நிறைய திறமை இருக்கிறது.
சூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார், அவருடன் சேர்ந்து நடிக்க எனக்கு மிகவும் பிடிக்கும் என பேசியிருக்கிறார்.