அந்த உறவில் இருந்தோம், கடைசியில் ஏமாற்றிவிட்டார்!! கசப்பான அனுபவத்தை பகிர்ந்த நடிகை சன்னி லியோன்
சன்னி லியோன்
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் தான் சன்னி லியோன். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உலகம் முழுவதும் இருக்கிறது.
இவர் கடந்த ஆண்டு சதிஷ், தர்ஷா குப்தா நடிப்பில் வெளியான 'ஓ மை கோஸ்ட்' என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரைத்துறையிலும் என்ட்ரி கொடுத்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏமாற்றிவிட்டார்!!
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சன்னி லியோன், தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர், என்னுடைய திருமணத்திற்கு முன்பு ஒருவரை காதலித்தேன். அவரை எனக்கு மிகவும் பிடித்துயிருந்தது. எனக்கும் அவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் என்னை அவர் ஏமாற்றுவது போல் உணர்ந்தேன்.
ஹவாய் தீவுகளில் பிரமாண்டமாகத் திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்தோம். அதற்கான வேலைகள் நடந்துகொண்டு இருந்த சமயத்தில் திடீரென்று வேண்டாம் என்று சொல்லி ஏமாற்றிவிட்டார். என்னுடைய இதயமே நொறுங்கிவிட்டது.
இதையடுத்து கடவுள் என்னுடைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை கொண்டுவந்தார். டேனியல் வெபரை அறிமுகப்படுத்தினார். டேனியலை திருமணம் செய்துகொண்ட பிறகு என்னுடைய வாழ்க்கை மாறிவிட்டது என்று சன்னி லியோன்தெரிவித்துள்ளார்.