ஆசை, லவ் டுடே பட நாயகி சுவலட்சுமியின் கணவரை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ
நடிகை சுவலட்சுமி
தனது நடனத்தின் மூலம் மாபெரும் இயக்குநர் சத்யஜித் ரேவின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சுவலட்சுமி. அவருடைய கதையில் உருவான Uttoran எனும் பெங்காலி படத்தின் மூலம் சுவலட்சுமி சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
இதன்பின் 1995ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ஆசை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பின், விஜய்யுடன் இணைந்து லவ் டுடே, நிலவே வா என ஹிட் படங்களை கொடுத்தார். தொடர்ந்து முரளி, சரவணன், அருண் விஜய் என பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்த இவர் கடந்த 2003ஆம் ஆண்டுக்கு பின் சினிமாவில் இருந்து வெளியேறினார்.
சுவலட்சுமியின் கணவர்
கொல்கத்தாவை சேர்ந்த தொழில்முனைவோரும், பேராசிரியருமான ஸ்வாகடோ பானர்ஜி என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின், சுவலட்சுமி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
தனது கணவரின் தொழிலை கவனித்து கொள்ளும் சுவலட்சுமி, கடந்த 2013ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அகாடமி ஆஃப் ஆர்ட் பல்கலைக்கழத்தில் முதுகலை பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகை சுவலட்சுமி தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பலரும் பார்த்திருக்க மாட்டீர்கள். இதோ அந்த புகைப்படம்..