மலையாள சினிமாவிற்கு நான் தேவையில்லை என தெரிகிறது... சுவாசிகா அதிரடி பேட்டி
சுவாசிகா
தமிழ் சினிமாவிற்கு மலையாள சினிமா நடிகைகள் வருவது ஒன்றும் புதியது அல்ல.
அப்படி தமிழில் அறிமுகமாகி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகை தான் சுவாசிகா. கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சிக் கிராமம் உள்பட சில படங்களில் நடித்து வந்தவர் அதன்பின் சரியாக படங்கள் நடிக்கவில்லை.

பல வருட இடைவெளிக்கு பிறகு லப்பர் பந்து படத்தின் மூலம் ரீ என்டரி கொடுத்தவர் இப்போது பிஸியான நடிகையாக ஆகிவிட்டார். கடைசியாக சுவாசிகா விஜய் ஆண்டனியுடன் நடித்த நூறு சாமி படம் வெளியாகி இருந்தது.
எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி சுவாசிகா மக்கள் மனதை மிகவும் கவர்ந்துவிட்டார்.

நடிகை பேட்டி
அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை சுவாசிகா பேசும்போது, மலையாள சினிமாவுக்கு என்னுடைய தேவை இல்லை என்பதுதான் உண்மையான நிலைமை.

நான் மலையாள சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றோ, தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் தான் நடிப்பேன் என்றோ கூறியதில்லை.
நான் நடித்த கதாபாத்திரங்கள் குறித்து பலரும் நல்லவிதமாகத்தான் பேசியிருக்கிறார்கள், இருந்தாலும் எனக்கு ஏன் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பதற்கான காரணம் அவர்களுக்குத்தான் தெரியும் என பேசியுள்ளார்.