கணவரை விவாகரத்து செய்கிறீர்களா, பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி- நடிகை ஸ்வாதி சொன்ன பதில்
நடிகை ஸ்வாதி
சகிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் தான் ஸ்வாதி.
இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய நாயகி ஸ்வாதிக்கும் ரசிகர்கள் வட்டாரம் கூடியது. இப்படத்தை தொடர்ந்து கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யாக்கை திரி உள்பட சில படங்களில் நடித்தார்.
பிஸியாக மலையாளம் மற்றும் தமிழில் நடித்துவந்த ஸ்வாதி 2018ம் ஆண்டு விகாஸ் வாசு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஸ்வாதி தனது கணவரை விவாகரத்து செய்கிறார் என செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

விவாகரத்து பற்றி நடிகை
நவீன் சந்திராவுடன் ஜோடி சேர்ந்து மன்த் ஆப் மது என்ற தெலுங்கு படத்தில் ஸ்வாதி நடித்துள்ளார். இப்பட புரொமோஷன் நிகழ்ச்சியில் ஸ்வாதியிடம் செய்தியாளர்கள் விவாகரத்து குறித்து கேட்டுள்ளனர்.
அதற்கு நடிகை ஸ்வாதி, என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி மற்றவர்களுடன் விவாதிப்பதில்லை என்பது நான் பின்பற்றும் விதிகளில் ஒன்று. அதனால் உங்களின் இந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது என கூறியுள்ளார்.

திருமணம் ஆகாமல் கருவுற்றால் அபராதம்! மணமுடிக்காமல் ஒன்றாக வாழ்ந்தால் 70 டொலர்..எங்கு தெரியுமா? News Lankasri