சன் டிவி புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள ஸ்வாதி ஷர்மா... நாயகன் விஜய் டிவி நடிகரா?
சன் டிவி
புதிய வருடம் ஆரம்பித்ததும் எல்லோரும் சில விஷயங்களை புதியதாக மாற்ற விரும்புவார்கள்.
அப்படி தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் சன் தொலைக்காட்சி எல்லாவற்றையும் புதியதாக மாற்ற களமிறங்கியுள்ளனர். முதலில் அவர்களின் சேனல் லோகோவை மேலே வருவது போல் மாற்றினார்கள்.
அதிலும் அவர்கள் டிஆர்பியில் குறையும் தொடர்களை முடித்து வைத்து புதிய சீரியல்களை அதிகம் களமிறக்கிய வண்ணம் உள்ளனர்.
புதிய சீரியல்
சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய இலக்கியா, ஆனந்த ராகம் என வெற்றிகரமாக ஓடிய சீரியல்கள் முடிவுக்கு வந்தது. அந்த சீரியல்கள் முடியும் வேகத்தில் புதிய சீரியல்களுக்கான புரொமோக்களை இறக்கிவிட்டனர்.

ஏற்கெனவே செல்லமே செல்லம் புதிய சீரியல் ஒளிபரப்பாக தொடங்கிவிட்டது, அடுத்து இரு மலர்கள் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.
தற்போது இன்னொரு புதிய சீரியல் சன் டிவியில் வரப்போகிறதாம். ஜீ தமிழ் நினைத்தாலே இனிக்கும் புகழ் ஸ்வாதி ஷர்மா நாயகியாக நடிக்க விஜய் டிவியில் சில சீரியல்கள் நடித்த சமீர் நாயகனாக நடிக்க உள்ளாராம்.
ஆனால் எப்போது சீரியல் வரும் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.