சினிமாவை தாண்டி நடிகை டாப்ஸி இத்தனை தொழில்களை செய்கிறாரா?- தாறுமாறு வருமானம்
நடிகை டாப்ஸி
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ஹிட் படங்களில் ஒன்று ஆடுகளம்.
இந்த படத்தில் நாயகியாக த்ரிஷா நடித்து வந்தார், பின் சில காரணங்களால் வெளியேற அவருக்கு பதில் டாப்ஸி நடித்து தமிழில் அறிமுகமானார்.
படத்தில் ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக தனது நடிப்பை சிறப்பான முறையிலேயே வெளிப்படுத்தினார். பின் ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2, கேம் ஓவர் என தொடர்ந்து படங்கள் நடித்தாலும் சில படங்களே ஹிட்டடித்தன.
இப்போது தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட் படங்களில் அதிகம் நடித்து வருகிறார்.
நடிகையின் தொழில்கள்
மும்பையில் சொந்தமாக வீடு வாங்கியிருக்கும் டாப்ஸி தனது சகோதரருடன் இணைந்து திருமண ஏற்பாடுகள் செய்துகொடுக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறாராம்.
அதுதவிர ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் ஒன்றையும் அவர் நட்த்திவருவதாக கூறப்படுகிறது.
மேலும் கே.ஆர்.ஐ எண்ட்டெர்டெயின்மெண்ட்டோடு சேர்ந்து புனே 7 ஏசஸ் என்ற பேட்மிண்டன் அணியின் உரிமையாளராகவும் அவர் இருப்பதாக தெரிகிறது.
இந்த தொழில்கள் மூலம் நடிகை டாப்ஸி நன்றாக சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.
திடீரென விற்கப்படும் விஜய் டிவி- போட்டிபோடும் 3 நிறுவனம்