இதனால் தான் ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு செல்லவில்லை.. டாப்ஸி ஓபன் டாக்
அம்பானி
சமீபகாலமாக இந்தியாவின் தலைப்பு செய்திகளில் ஒன்றாக மாறியிருக்கிறது முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வு.
இந்த திருமண நிகழ்ச்சியில் பல திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த், சூர்யா, அட்லீ ஆகியோர் கலந்துகொண்டனர். அதிலும் ரஜினிகாந்த் அம்பானி திருமணத்தில் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிபிடத்தக்கது.
பேட்டி
ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் பிரபல நடிகை டாப்ஸி பன்னு கலந்து கொள்ளவில்லை. இதை பற்றி அவர் கூறியதாவது, "அம்பானி குடும்பத்தினரை நான் தனிப்பட்ட முறையில் தெரியாது. திருமண நிகழ்ச்சிகள் என்பது குடும்பத்தினரும், நெருங்கிய உறவினர்களும் மட்டுமே கலந்து கொள்ள வேண்டிய நிகழ்வுகள். அப்படியான தொடர்பு இருந்தால் தான் நான் திருமணத்திற்கு செல்வேன். இதுதான் என் கருத்து," என்று டாப்ஸி தெரிவித்தார்.

Optical illusion: கண்களை பரிசோதிக்கும் நுட்பமான படம்!இதில் இருக்கும் “80” கண்களுக்கு தெரிகிறதா? Manithan
