35 வயது எட்டிய தமன்னாவின் சொத்து மதிப்பு விவரம்.. இத்தனை கோடிக்கு சொந்தமா
தமன்னா
இவர் இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் தமன்னா, ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடுவதிலும் கேஜிஎப், ஜெயிலர், ஸ்ட்ரீ 2 என தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களில் தமன்னாவின் நடனம் இடம்பெற்று வருகிறது.
நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் தமன்னா, 2025ல் திருமணம் செய்துகொள்ள போகிறார் என தகவல் தெரிவிக்கின்றனர். இன்று நடிகை தமன்னாவின் 35வது பிறந்தநாள். திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், தமன்னாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை தமன்னாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 120 கோடிக்கும் மேல் இருக்கும் என தகவல் கூறுகின்றனர். இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
தமன்னாவிற்கு முன்பையில் சொந்தமான பிரம்மாண்ட வீடு ஒன்று உள்ளதாம். இதனுடைய மதிப்பு ரூ. 16 கோடி முதல் ரூ. 20 கோடி இருக்குமாம். மேலும் மும்பையில் உள்ள தமன்னாவிற்கு சொந்தமான அபார்ட்மென்டின் விலை ரூ. 7 கோடி இருக்கும் என்கின்றனர்.
BMW 320i - ரூ. 43 லட்சம், Mercedes Benz - ரூ. 1 கோடி, Mitsubishi Pajero Sport - ரூ. 29 லட்சம், Land Rover Range Rover Discovery Sport - ரூ. 75 லட்சம் மதிப்புள்ள பல சொகுசு கார்களை தமன்னா சொந்தமாக வைத்துள்ளார் என சொல்லப்படுகிறது.