விஜய்யின் சுறா படம் நன்றாக ஓடாது என்று எனக்கு அப்போதே தெரியும்- நடிகை தமன்னா ஓபன் டாக்
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் ரஜினியை அடுத்து அதிக வசூல் வேட்டை படங்கள் கொடுத்த ஒரு நடிகர். முன்னணி நாயகனாக இருக்கிறார், இதனால் இவரது எல்லா படங்களும் டாப் வசூல் செய்யும், வெற்றியடையும் என கூற முடியாது.
இவரது திரைப்பயணத்தில் நிறைய மோசமான வசூல், விமர்சனம் கொண்ட படங்களும் உள்ளன. அப்படி அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தை கூறலாம்.
அப்படி விஜய் நடித்த படங்களில் விமர்சனம் ப்ளஸ் வசூல் ரீதியாகவும் அடிவாங்கிய ஒரு படம் குறித்து அதில் நடித்த நடிகை பேட்டி கொடுத்துள்ளார்.
நடிகையின் பேட்டி
அவர் வேறுயாரும் இல்லை இப்போது காவாலா பாடலுக்கு மக்களை ஆட்டம் போட வைக்கும் நடிகை தமன்னா தான். இவரிடம் ஒரு பேட்டியில், நீங்கள் நடித்ததில் மிகவும் மோசமான படம் எது என கேட்டுள்ளார்கள்.
அதற்கு அவர், நான் நடித்த நிறைய படங்கள் சுமாராக தான் ஓடியது, அதில் மிகவும் மோசமான படம் என்றால் அது சுறா தான். அதில் நான் மிகவும் கேவலமாக இருந்தேன், நான் இனிமேல் அதுபோல் படம் நடிக்க மாட்டேன்.
சுறா படம் நடிக்கும் போதே அது சரியாக போகாது என்று எனக்கு தோன்றியது. ஆனால் கமிட்டாகிவிட்டேன், நடித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நடித்து முடித்தேன் என கூறியுள்ளார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை சரண்யா துராடி- இந்த டிவி சீரியலா?