தமன்னாவிற்கு விரைவில் திருமணமா?... யாரு மாப்பிள்ளை பாருங்க
தமன்னா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் அவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்துள்ளார்.
இவர் தமிழில் அயன், பையா, வீரம், சுறா, தேவி, அரண்மனை- 4,ஜெயிலர் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர்.
இந்நிலையில், நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மா என்பவரை காதலித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் இருவரும் இணைந்து ஜோடியாக பல நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தனர்.
திருமணமா?
தற்போது தமன்னா திருமணம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பேட்டி ஒன்றில் தமன்னா இது குறித்து பகிர்ந்துள்ளார். அதில், " 2025 - ம் ஆண்டு நான் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமன்னாவின் திருமணம் அடுத்த ஆண்டு தொடக்கத்திலே நடக்க இருப்பதாகவும், அதற்கான பணிகளில் தமன்னாவின் குடும்பத்தினர் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது குறித்து தமன்னா தெரிவிப்பார் என எதிர்பாக்கப்படுகிறது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
