எந்த தமிழ் படத்திற்காகவும் செய்யாததை ‘ரெட்ரோ’ படத்திற்காக செய்த பூஜா ஹெக்டே.. என்ன தெரியுமா?
பூஜா ஹெக்டே
ஜீவா நடித்த முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் நடித்து பிஸியாக வலம் வருகிறார்.
தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வரும் பூஜா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
அதை தொடர்ந்து, விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
என்ன தெரியுமா?
இந்நிலையில், இப்படத்திற்காக நடிகை பூஜா ஹெக்டே செய்துள்ள செயல் பலரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
அதாவது, ரெட்ரோ படத்திற்காக பூஜா ஹெக்டே தமிழில் டப்பிங் பேசி இருக்கிறார். அவர் தமிழில் டப்பிங் பேசி உள்ளது இதுவே முதன்முறை ஆகும். இவர் இதற்கு முன் நடித்த முகமூடி, பீஸ்ட் ஆகிய படங்களில் அவருக்கு வேறொருவர் தான் குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

Mahanadhi: அனைத்தையும் இழந்த விஜய்.. பேச வழியில்லாமல் தவித்த காவேரி.. மாமியார் மனம் மாறுமா? Manithan
