புதியதாக வெப் தொடரில் நடிக்கப்போகும் நடிகை த்ரிஷா... வெளிவந்த தகவல்
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் என்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் தான் நடிகை த்ரிஷா.
மாடலிங் துறையில் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் இப்போது கோடிக்கணக்கான மக்களின் மனதை வென்று முன்னணி நாயகியாக தென்னிந்தியாவில் வலம் வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் வெளியாகி இருந்தது.
படத்தின் கதையை தாண்டி த்ரிஷா கதாபாத்திரத்திற்கும் நல்ல பாராட்டு தெரிவித்திருந்தனர்.

வெப் தொடர்
அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு என படங்களில் நடித்துள்ளவர் தற்போது வெப் தொடர்களில் நடிக்க உள்ளாராம்.

நந்தினி ரெட்டி இயக்கவிருக்கும் புதிய வெப் தொடரில் த்ரிஷா நடிக்க உள்ளதாகவும் முழுக்க முழுக்க சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த தொடர் முற்றிலும் நாயகியைப் மையப்படுத்தி உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.