உடல் எடை குறைந்து மெலிந்து போய்விட்டாரா நடிகை திரிஷா.. ஜிம் ஒர்கவுட் வீடியோ
திரிஷா
தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தக் லைஃப் படம் படுதோல்வியை சந்தித்தது.

இப்படம் சற்று ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு கொடுத்திருந்தாலும், அடுத்தடுத்து வெளிவரவிருக்கும் கருப்பு படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். மேலும் விஸ்வம்பரா, ராம் ஆகிய படங்களும் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிம் ஒர்கவுட் வீடியோ
நடிகை திரிஷா தனது உடலை எப்போதும் ஃபிட்டாக வைத்திருக்க கூடிய நபர் ஆவார். அவ்வப்போது தனது ஜிம் ஒர்கவுட் புகைப்படங்கள், வீடியோக்களை கூட அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது திரிஷா வெளியிட்டுள்ள ஜிம் ஒர்கவுட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகை திரிஷா தனது உடல் எடையை குறைத்து மிகவும் மெலிந்து போய்விட்டார் என கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ..