அடுத்தடுத்து நடிகை த்ரிஷா நடிப்பில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகிறதா?.. செம பிஸி தான்
நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷா, எப்போதும் இளமையாக காணப்படும் ஒரு பிரபலம்.
மௌனம் பேசியதே படத்தில் இருந்து இப்போது வரை நிறைய படங்கள் நடித்து மக்களை மகிழ்வித்த வண்ணம் உள்ளார்.
பொன்னியின் செல்வன் படம் இடையில் கொஞ்சம் தூங்கிய த்ரிஷாவின் மார்க்கெட்டை கொஞ்சம் எழுப்பிவிட்டது என்றே கூறலாம்.
அதன்பிறகு விஜய்யின் லியோ, சிரஞ்சீவி படம் என தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடிக்கிறார்.
அடுத்தடுத்த படங்கள்
கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் நடிகை த்ரிஷா நடிப்பில் இருந்து விலகுகிறார் என்றெல்லாம் செய்திகள் வலம் வந்தன.
ஆனால் அது உண்மையல்ல, நடிகை த்ரிஷா நடிப்பில் அடுத்தடுத்து வரப்போகும் படங்கள் லிஸ்ட் பார்ப்போம்.
அஜித்தின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, கமல்ஹாசனுடன் தக் லைஃப், சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா, சூர்யா 45, 96 பாகம் 2, ஆர்.ஜே.பாலாஜியின் அம்மன் படம், மலையாளத்தில் ஜீத்து ஜோசப் படம் என அடுத்தடுத்து நிறைய படங்கள் கைவசம் வைத்துள்ளார்.