நடிகை த்ரிஷாவின் 43-வது பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா
தமிழ் சினிமாவில் கடந்த 24 ஆண்டுகளாக பயணித்து 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் நடிப்பில் அடுத்ததாக கருப்பு திரைப்படம் வெளிவரவுள்ளது. இதை தொடர்ந்து விஸ்வம்பரா, ராம் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவரவுள்ளன.

த்ரிஷாவின் பிறந்தநாள்
தென்னிந்திய சினிமாவின் குயின் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை த்ரிஷாவுக்கு இன்று பிறந்தநாள். தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை த்ரிஷாவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

சொத்து மதிப்பு
இந்த நிலையில், நடிகை த்ரிஷாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 85 கோடி. இவர் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

நடிகை த்ரிஷாவுக்கு சென்னையில் சொந்தமாக பிரம்மாண்ட வீடு இருக்கிறது. அந்த வீட்டின் மதிப்பு ரூ. 10 கோடி ஆகும். மேலும், Mercedes-Benz S-Class - ரூ. 80 லட்சம், BMW 5-Series - ரூ. 75 லட்சம், Range Rover Evoque - ரூ. 60 லட்சம் ஆகிய சொகுசு கார்கள் த்ரிஷாவுக்கு சொந்தமாக உள்ளன.

பொறுப்பு துறப்பு: த்ரிஷாவின் சொத்து மதிப்பு குறித்து இங்கு பதிவிடப்பட்டுள்ள தகவல் சினிஉலகத்தின் சொந்த கருத்து அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri