18 வருடத்திற்கு பின் கிடைத்த வாய்ப்பு- ஸ்பெஷல் பயிற்சியில் நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷா
என்றும் 16 மார்க்கண்டேயன் என்பது போல எவ்வளவு தான் வயசானாலும் எப்போதுமே இளமையாக காணப்படுபவர் நடிகை த்ரிஷா. 40 வயதாகும் இவர் சிம்ரனின் ஜோடி திரைப்படத்தில் அவரது தோழியாக நடித்து அறிமுகமானார்.
அதன்பின் 2002ம் ஆண்டு நாயகியாக சூர்யாவின் மௌனம் பேசியதே படத்தில் நடிக்க அவரது திரைப்பயணத்தின் வெற்றியின் உச்சத்திற்கே சென்றது.

சர்க்கரை நிலவே, அழகிய தீயே என பல ஹிட் பாடல்கள் பாடிய ஹரிஷ் ராகவேந்திரா இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?
இடையில் ஹிட் காணாத த்ரிஷா 96, பொன்னியின் செல்வன் படங்கள் மூலம் மீண்டும் டாப் நாயகியாக கலக்க இருக்கிறார்.
லியோ படங்களுக்கு பிறகு விடாமுயற்சி, ராம், ஐடென்டிட்டி, தக்லைப் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வர தற்போது ஒரு படத்திற்காக த்ரிஷா புதிய விஷயம் ஒன்றை கற்றுக்கொண்டு வருகிறார்.
புதிய பயிற்சி
அதாவது நடிகை த்ரிஷா தெலுங்கில் புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார், படத்திற்கு சிரஞ்சீவி தான் நாயகன்.
18 வருடங்களுக்கு பிறகு அவருடன் இணைந்து நடிக்க இருக்கிறாராம், படம் சரித்திர கதையில் உருவாக இருக்கிறதாம்.
இதில் அவர் ஒரு வீர பெண்மணியான ஆக்ஷன் ரோலில் நடிக்க வேண்டும் என்பதால் அதற்காக குதிரையேற்றம், களரி சண்டை போன்ற பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri
