த்ரிஷா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. இவர் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் மற்றும் சூர்யாவின் 45வது படம் என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை த்ரிஷா, மனமுடைந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மகனின் மரணம்
நடிகை த்ரிஷா தனது மகனாக Zorro எனும் நாய் குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். பாசமாக வளர்த்து வந்த Zorro இன்று காலை உயிரிழந்து விட்டதாக த்ரிஷா தெரிவித்துள்ளார்.
12 ஆண்டுகளாக தன்னுடைய Zorro இருந்துள்ளதாகவும் அவர் அந்த பதிவில் கூறியுள்ளார். தனது நாய் குட்டியின் புகைப்படங்களை த்ரிஷா வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..
— Trish (@trishtrashers) December 25, 2024