Love always wins.. காதல் குறித்து நடிகை த்ரிஷாவின் திடீர் பதிவால் ரசிகர்கள் ஷாக்
த்ரிஷா
நடிகை த்ரிஷா கோலிவுட்டில் டாப் நடிகையாக வலம் வருகிறார். 20 ஆண்டுகளை கடந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து பிரபலமானார்.
தமிழில் விஜய், அஜித், ரஜினி, கமல் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவிட்டார். கடைசியாக அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்திருந்தார்.
தற்போது இவரது நடிப்பில் குட் பேட் அக்லி, தக் லைஃப் படங்கள் வெளியாக உள்ளன. ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் த்ரிஷா.
ரசிகர்கள் ஷாக்
இந்நிலையில், நடிகை த்ரிஷா இணையத்தில் பகிர்ந்த போட்டோ வைரலாகி வருகிறது. அதாவது இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் திரிஷா, தற்போது 'Love always wins' என்ற கேப்ஷனுடன் வெட்கத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதை கண்ட ரசிகர்கள் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று அதிர்ச்சி அடைந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Love always wins💚 pic.twitter.com/eLjiFPLVOO
— Trish (@trishtrashers) March 29, 2025