துணிவு, வாரிசு இரண்டு படங்களையும் FDFS பார்த்த நடிகை த்ரிஷா- வெளிவந்த புகைப்படம்
துணிவு Vs வாரிசு
தமிழ் சினிமா இன்று கொண்டாட்டத்தின் உச்சத்தில் உள்ளது. காரணம் பல வருடங்களுக்கு பிறகு முன்னணி நடிகர்களான அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் வெளியாகியுள்ளது.
இவர்கள் படங்கள் தனித்தனியாக வந்தாலே திருவிழா கோலமாக இருக்கும், ஒரே நாளில் இருவரின் படங்கள் வந்தால் சொல்லவா வேண்டும், படு மாஸாக இருக்கும்.
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் உள்ளார்கள்.
ஒரே நாளில் இரண்டு படங்கள்
இரண்டு படங்களையும் அடுத்தடுத்து ரசிகர்கள் பார்த்து வரும் நிலையில் பிரபல நடிகை த்ரிஷாவும் துணிவு மற்றும் வாரிசு படங்களை FDFSவிலேயே பார்த்துள்ளார்.
தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் த்ரிஷா படம் பார்க்க அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
உயரிய விருதை பெற்ற ராஜமௌலி இயக்கிய RRR திரைப்படம்- படு கொண்டாட்டத்தில் ரசிகர்கள்