மறைந்த சீரியல் நடிகை உமா மகேஷ்வரி இப்படி ஒரு நோயாலும், குடும்ப பிரச்சனையையும் அனுபவித்தாரா?- சோகமான விஷயம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு செய்தி வந்தது. அதாவது மெட்டி ஒலி என்ற ஹிட் சீரியலில் அக்கா-தங்கைகள் 5வரில் ஒருவராக விஜி வேடத்தில் நடித்த நடிமை மறைவு என்பது தான்.
அவரது நிஜ பெயர் உமா மகேஷ்வரி, 40 வயதான அவர் இந்த வயதிலேயே உயிரிழந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
உமாவின் மறைவுக்கு நிறைய செய்திகள் வருகின்றன, ஒரு கட்டத்தில் குழந்தை இல்லாத காரணத்தால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட தற்கொலை செய்துகொண்டார் என்றும் கூறப்பட்டது.
இதுகுறித்து மெட்டி ஒலியில் கடைசி பெண்ணாக நடித்த ரேவதி கூறுகையில், எந்த விஷயமும் சரியாக தெரியாமல் வதந்தி பரப்புகிறார்கள். விஜிக்கு மஞ்சக்காமாலை நோய் வந்தது, அதற்குள் சிகிச்சையும் பெற்றார்.
அதன்பிறகு மஞ்சக் காமாலை வந்தபோது அவர் கவனிக்காமல் சிகிச்சை எடுக்காமல் இருந்தார். இதுவே அவரது மரணத்திற்கு காரணம் என்றார்.