அடேங்கப்பா நடிகை ஊர்வசி மகளா இவர், நாயகி ரெடி... லேட்டஸ்ட் போட்டோ
நடிகை ஊர்வசி
ஊர்வசி, தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கொடிகட்டிப பறந்தந நடிகைகளில் ஒருவர்.
முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.
தென்னிந்திய திரை உலகில் ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்த ஊர்வசி தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

மகள் என்ட்ரி
சினிமாவில் இப்போது ஊர்வசியின் மகள் தேஜலட்சுமி நாயகியாக என்ட்ரி கொடுக்க உள்ளார்.

மலையாளத்தில் உருவாகும் சுந்தரியாயவள் ஸ்டெல்லா என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ள தேஜலட்சுமி பாப்லோ பார்ட்டி என்ற படத்தில் தனது அம்மாவுடன் இணைந்தும் நடித்துள்ளாராம்.
சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ள நிலையில் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார் ஊர்வசி மகள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாக ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri