அடுத்த ஹீரோயின் ரெடி, முதன்முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஊர்வசி- வைரலாகும் போட்டோ
நடிகை ஊர்வசி
குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்து பிறகு கே.பாக்யராஜ் இயக்கத்தில் உருவான முந்தானை முடிச்சு படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.
அப்பட வெற்றியை தொடர்ந்து அபூர்வ சகோதரிகள், கொம்பேறி மூக்கன், நெருப்புக்குள் ஈரம், ஓ மானே மானே, அம்பிகை நேரில் வந்தாள், அன்பே ஓடிவா என அடுத்தடுத்து படங்களில் நடித்தார்.

சீரியலில் நடிப்பதை தாண்டி பால் பண்ணை தொடங்கிய பிரபலம்- பால் கறக்கும் வீடியோவை வெளியிட்ட நடிகை, யார் பாருங்க
90களில் முன்னணி நாயகியாக வலம் வந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
குடும்பம்
2000ம் ஆண்டு நடிகர் மனோஜ் கே.ஜெயன் என்பவரை திருமணம் செய்த ஊர்வசிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளார்.
பின் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2008ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள். பின் ஊர்வசி சென்னையை சேர்ந்த தொழிலதிபரான சிவபிரசாத்தை மறுமணம் செய்துகொண்டார்.
46 வயதில் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் நடிகை ஊர்வசி தனது மகள், மகன், கணவர் என அனைவருடனும் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அடுத்த நாயகி ரெடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
