ஹீரோ, டைரக்டர் லாம் அட்ஜஸ்ட் பண்ண சொல்லுவாங்க.. வரலட்சுமி சரத்குமார் அதிர்ச்சி புகார்
தென்னிந்திய சினிமாவில் முக்கிய ஹீரோயினாக வலம் வருபவர் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் சர்க்கார், மற்றும் சண்டக்கோழி 2 போன்ற படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து தரப்பு மக்கள் கவனத்தையும் ஈர்த்தார்.
தற்போது இவர் தமிழ் படங்களை காட்டிலும் தெலுங்கு திரைப்படங்களில் பல முன்னணி ரோல்களில் நடித்து வருகிறார்.

அட்ஜஸ்ட் பண்ண சொல்றாங்க..
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார் பரபரப்பான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர், "சினிமாவில் நடிகைகளுக்கு நடக்கும் பல பிரச்சனைகள் எனக்கும் நடந்துள்ளது. ஹீரோ, டைரக்டர் இவர்கள் கூட adjustment பண்ண சொல்வார்கள் ".
"அதற்கு நான் எனக்கு அப்படி பட்ட பட வாய்ப்புகள் வேண்டாம் என்று மறுத்துவிடுவேன். நான் இரவு நிம்மதியா தூங்க வேண்டும். எந்த ஒரு குற்ற உணர்வு இருக்க கூடாது. பட வாய்ப்புக்காக இது போன்ற தவறான செயல்களில் ஈடுபட மாட்டேன்" என்று கூறியுள்ளார்.
பிரபல நடிகர் சரத்குமாரின் மகளுக்கே இந்த நிலைமையா என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகர் சித்தார்த் சொத்து மதிப்பு மற்றும் கார் கலெக்ஷன்ஸ்- ஓர் பார்வை