அஜித் தான் CM.. ஜெயலலிதா அம்மா சொன்ன வார்த்தை! பிரபலம் பரபரப்பு பேட்டி
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்பட்டு வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு திரைப்படங்கள் வெளிவந்தன.
இதில் குட் பேட் அக்லி படம் அஜித்தின் கரியர் பெஸ்ட் திரைப்படமாக மாறியுள்ளது. இதனால் மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் கைகோர்த்துள்ளார். விரைவில் AK 64 படத்தின் அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் தான் CM
நடிகர் அஜித் அரசியலில் களமிறங்கப்போகிறார் என்கிற பேச்சு அவ்வப்போது சினிமா வட்டாரத்தில் உலா வந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு, அஜித்தை தனது கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருந்ததாக பேசப்படுகிறது.
இந்த நிலையில், நடிகையும் பிரபல அரசியல்வாதியுமான வாசுகி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசியுள்ளார். இதில் "அம்மா கடைசியாக மருத்துவமனையில் இருந்தபோது கூட, 'அஜித் தம்பி அரசியலுக்கு வந்திருந்தாள் இந்நேரம் பொது செயலாளர் ஆகி இருப்பார்' சொன்னாங்க. இப்போ அஜித் அரசியலில் இருந்திருந்தால் அவர்தான் CM. வேறு யாருமே வந்திருக்க முடியாது" என கூறியுள்ளார்.