அந்த விஷயம் உடல் ரீதியா சவாலாக இருந்தது.. நடிகை வேதிகா ஓபன் டாக்!!
வேதிகா
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை வேதிகா. இவர் மதராஸி என்கிற திரைப்படம் மூலமாக திரையில் தோற்றினர்.
இதனை அடுத்து வேதிகா சில வெற்றி படங்களில் நடித்திருந்தாலும், பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.
தற்போது யாக்ஷினி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் தமிழ், மலையாளம் ஹிந்தி, தெலுங்கு , கன்னடம், மராத்தி போன்ற மொழிகளில் வெளியாகி இருக்கிறது.
ஓபன் டாக்!!
அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பேசிய வேதிகா,"தற்போது யாக்ஷினி தொடரில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். பெரிய ரோல்களில் நடிக்கும் போது கூடுதல் பொறுப்பு இருக்கும். இந்த கதாபாத்திரம் நீண்ட நேரம் உருவாகினாலும், படப்பிடிப்பின்போது என்ன நடக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள எனக்கு நேரம் இல்லை".
"நான் இந்த யாக்ஷினி கதாபாத்திரத்தில் நடிக்கும் போது எனக்கு உடல் ரீதியாக சவாலாக இருந்தது. ஆனால், நான் செய்த முயற்சிகள் அனைத்தும் அதற்கு தகுதியானவைதான்" என்று வேதிகா கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
