எனக்கு இரண்டு காதல் உண்டு.. ஓப்பனாக உடைத்த நடிகை வேதிகா
வேதிகா
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வேதிகா. இவர் மதராஸி என்ற திரைப்படம் மூலமாக திரையில் தோன்றினார்.
இதனை அடுத்து வேதிகா, பாலா இயக்கத்தில் நடித்த ‘பரதேசி’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது யாக்ஷினி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.
இந்த தொடர் தமிழ், மலையாளம் ஹிந்தி, தெலுங்கு , கன்னடம், மராத்தி போன்ற மொழிகளில் வெளியாகி இருக்கிறது.
வேதிகா ஓபன்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் தன் இரண்டு காதல் குறித்து வேதிகா சொன்ன விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " என் வாழ்க்கையில் இரண்டு காதல்கள் உள்ளது. எனது முதல் காதல் என் அம்மா. அவரிடம் இருந்து வருவது முத்தான காதல். அதன் பின், என் நடனம். அது தான் எனக்கு இரண்டாவது காதல்.
எனக்கு நடனம் என்றால் உயிர். எனக்கு ஓய்வு நேரம் கிடைத்தால் போதும் நடனம் ஆட தொடங்கி விடுவேன். இந்த இரண்டு காதலும் என் வாழ் நாள் முழுவதும் நீடிக்கும்" என்று தெரிவித்துள்ளார். மேலும், ஆண்கள் மீது காதல் வராதா? என்ற கேள்விக்கு, அது வரும்போது பார்த்து கொள்ளலாம்' என்று கூறியுள்ளார்.

என் பையனை வெட்டியது போல்.. அவர் மகளையும்.. அப்போ பாராட்டியிருப்பேன் - கவின் தந்தை ஆவேசம் IBC Tamilnadu

100க்கும் மேற்பட்ட பெண்கள் புதைப்பு; வன்கொடுமை, ஆசிட் தழும்பு - 13 இடங்களில் தோண்டும் பணி! IBC Tamilnadu

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan
