நடிகை வித்யா பிரதீப்பிற்கு குழந்தை பிறந்தது.. அழகிய குழந்தையின் புகைப்படம் இதோ
வித்யா பிரதீப்
2010 முதல் தனது திரை பயணத்தை துவங்கி 2018ல் வெளிவந்த தடம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வித்யா பிரதீப்.
வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் இவர் மிகவும் பிரபலமானவர் என்று தான் சொல்லவேண்டும். சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்றான அழகி சீரியலில் கதாநாயகியாக நடித்து அசத்தியிருப்பார்.
நடிகை வித்யா பிரதீப் தனக்கு மைக்கேல் என்பவருடன் திருமணமான விஷயத்தை கடந்த ஜூலை மாதம் தான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். மேலும் தங்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிவிட்டது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
ஆண் குழந்தை
கடந்த சில வாரங்களுக்கு முன், தான் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் நடிகை வித்யா. இந்த நிலையில் தற்போது நடிகை வித்யா பிரதீப் - மைக்கேல் தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தனது குழந்தையின் புகைப்படத்துடன் வித்யா பிரதீப் இந்த விஷயத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
You May Like This Video