நடிகை விஜய்சாந்தியின் கணவரை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ
நடிகை விஜயசாந்தி
தென்னிந்திய சினிமாவில் ஆக்ஷன் நாயகியாக கலக்கியவர் விஜயசாந்தி. ஹீரோக்களுக்கு இணையான சண்டை காட்சிகளில் மிரட்டுவார். மேலும் டூப் போடாமல் ஸ்டண்ட் செய்வார் என பலராலும் கூறப்படுகிறது.
தென்னிந்திய அளவில் இவர் பிரபலமான நட்சத்திரமாக இருந்தாலும் கூட தெலுங்கில் தான் எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தெலுங்கில் வெளிவந்த மகேஷ் பாபுவின் Sarileru Neekevvaru படத்தில் நடித்திருந்தார்.
2006ஆம் ஆண்டு வெளிவந்த Naayudamma படத்தில் நடித்திருந்த இவர், அதன்பின் கிட்டதட்ட 14 ஆண்டுகள் கழித்து Sarileru Neekevvaru எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயசாந்தியின் கணவர்
நடிகை விஜயசாந்தி கடந்த 1988ஆம் ஆண்டு பிரபல நடிகர் எம்.எஸ். ஸ்ரீனிவாஸ் பிரசாத் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் இந்த ஜோடியின் அழகிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுவரை பலரும் பார்த்திராத விஜயஷாந்தின் கணவர் எம்.எஸ். ஸ்ரீனிவாஸ் பிரசாத்தின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..