பயங்கர கார் விபத்தில் சிக்கிய கணவர், யாருமே உதவலில்லை- நடிகை வினோதினி எமோஷ்னல் தகவல்
நடிகை வினோதினி
தமிழ் சினிமாவில் 1982ம் ஆண்டு வெளியான மணல் கயிறு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை வினோதினி.
பாலு மகேந்திரா இயக்கத்தில் உருவான வண்ண வண்ண பூக்கள் படத்தில் பிரசாந்த் ஜோடியாக நடித்திருந்தார். சீரியல்களிலும் நடித்து வந்த வினோதினி திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றார்.
அண்மையில் இவர் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார், அதில் அவர் கூறிய எமோஷ்னல் விஷயம் ரசிகர்களை சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
பேட்டியில் நடிகை
அந்த வீடியோ அவர், 20 வயதுள்ள 2 பேர் பைக்கில் வந்து எனது கணவரை மோதிவிட்டு சென்றுவிட்டனர், வேறு எதுவும் தெரியாது. விபத்தை ஏற்படுத்திவிட்டு ரூ. 10,000 அபராதமாக செலுத்திவிட்டு சென்றுவிட்டனர்.
அந்த விபத்திற்கு பின் என் குடும்பம் மிகப்பெரிய துன்பத்தை சந்தித்தது, அந்த சூழ்நிலையில் நான் தனி ஆளாக யாருடைய உதவியும் இல்லாமல் இருந்தேன்.
நடிகர் சங்கம் ஒன்று சேர்ந்து வந்து இருந்தால் விபத்து ஏற்படுத்தியவர்கள் யார் என்று கண்டுபிடித்து இருக்கலாம்.
யாருடைய உதவியும் இல்லாமல் தனி ஆளாக பல கஷ்டங்களை அனுபவித்தேன் என கூறியுள்ளார்.