புதிய சீரியலில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் வினுஷா... எந்த டிவி தொடர் தெரியுமா?
வினுஷா தேவி
மாடலிங் துறையில் கலக்கி அப்படியே சீரியல் இயக்குனர் கண்ணில் பட்டு சின்னத்திரை பக்கம் வந்தவர் வினுஷா தேவி.
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிய பாரதி கண்ணம்மா தொடரில் முதலில் கண்ணம்மாவாக ரோஹினி நடித்து வந்தார், திடீரென அவர் சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார்.
அவருக்கு பதில் கண்ணம்மாவாக நடிக்க வந்தவர் தான் வினுஷா தேவி. முதல் தொடரிலேயே மக்களின் கவனத்தை பெற்றவர் அடுத்து விஜய் டிவியிலேயே பனிவிழும் மலர்வனம் சீரியலில் நாயகியாக நடித்து வந்தார்.
இடையில் வினுஷா தேவி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஷோவில் கலந்துகொண்டார்.
புதிய தொடர்
இந்த நிலையில் நடிகை வினுஷா தேவி புதிய சீரியலில் நாயகியாக நடிக்க கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த புதிய சீரியலும் விஜய் டிவியிலேயே தான் ஒளிபரப்பாக உள்ளதாம்.

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri
