திருமணம் செய்யவில்லை, சொத்துக்களை எல்லாம் தானமாக கொடுத்த தமிழ் நடிகை.. யார் தெரியுமா?
1500க்கும் மேற்பட்ட படங்கள். 6000 மேற்பட்ட நாடகங்களில் நடித்த ஒரு நடிகை குறித்து இந்த பதிவில் காணலாம். இளம் வயதிலேயே பாட்டி வேடங்களில் கவனம் ஈர்த்த இவரை அவரது சொந்த ஊரில் குலதெய்வமாக வழிபடுகின்றனர்.
இவரா?
இந்த சாதனைகளுக்கு சொந்தக்காரர் வேறு யாருமில்லை, மறைந்த பழம் பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி தான். 6 வயதில் லட்சுமி நாடக குழுக்களில் தன்னை இணைத்துக் கொண்ட இவர் சந்திரலேகா படத்தில் நடன குழுவில் ஒருவராக நடித்தார்.
திருமணமே செய்துகொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்திய இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சொந்த ஊரில் பத்து ஏக்கருக்கும் மேலான தோப்பு, வீடு என சொத்துக்கள் இருந்தது.
அவை அனைத்தும் தான் வளர்த்தவர்களுக்கு எஸ்.என்.லட்சுமி தானமாக கொடுத்துவிட்டதாக அவரது ஊர்க்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
