நயன்தாரா, த்ரிஷா இல்லை.. கோலிவுட்டின் ஜீரோ பிளாப் நாயகி யார் தெரியுமா?
ஜீரோ பிளாப் நாயகி
மலையாள சினிமா நடிகைகள் பல தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வலம் வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை வென்று சினிமாவில் ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து ஜீரோ பிளாப் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு மலையாள நடிகை குறித்து உங்களுக்கு தெரியுமா.
யார் தெரியுமா?
ஆம், அவர் வேறுயாருமில்லை நடிகை மாளவிகா மோகனன் தான். ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.
அதன் பின், பா.இரஞ்சித் இயக்கிய தங்கலான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் தமிழில் நடித்து வெளியான மூன்று படங்களுமே ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அந்த வகையில், ஜீரோ பிளாப் நாயகியாக தமிழ் சினிமாவில் மாளவிகா மோகனன் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.