பல வருடங்களுக்கு பிறகு பூவே பூச்சூடவா சீரியலில் நடிக்க வரும் நடிகை- யாரு தெரியுமா? சூப்பர் லுக்
தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் நிறைய சீரியல் நடிகர்கள் வருகிறார்கள்.
ஆனால் 90களில் குறிப்பிட்ட நடிகர்கள் தான், அவர்களே அடுத்தடுத்து சீரியல்களிலும் வருவார்கள், மக்களுக்கு அவர்களது முகம் நன்றாக பதிந்திருக்கும்.
பிரபலங்கள் பலர் மக்களின் பேவரெட் லிஸ்டில் உள்ளார்கள், இப்போதும் நடிக்கிறார்கள், சிலர் திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டனர்.
அப்படி அந்த காலத்தில் பல சீரியல்கள் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் ரேவதி. மெட்டி ஒலி சீரியல் இவர் நடித்ததில் மிகவும் பிரபலமான ஒன்று.
பல வருடங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
தற்போது விஜய்யின் ஒளிபரப்பாகும் புதிய சீரியலான ராஜ பார்வையில் நடிக்க தொடங்கியுள்ள அவர் இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலிலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
அந்த சீரியலில் சுஷ்மா என்ற வேடத்தில் தான் நடிக்க உள்ளாராம்.