ரஜினியை ரகசியமாக காதலித்த பிரபல நடிகை.. பலரும் அறியாத ரகசியம்!
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் கூலி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சௌபின் சாஹிர், நித்யா ராம், ஸ்ருதிஹாசன், சார்லி, லொள்ளு சபா மாறன், கண்ணா ரவி உள்ளிட்ட பலர் நடித்தனர்.
அறியாத ரகசியம்!
இந்நிலையில், 80களில் நடிகை ஒருவர் ரஜினியை ரகசியமாக காதலித்ததாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அவர் வேறு யாருமில்லை, நடிகை சில்க் ஸ்மிதாதான். இவர்கள் இருவரும் இணைந்து மூன்று முகம், தங்க மகன், பாயும் புலி, ரங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர்.
இவர்கள் குறித்து காதல் கிசுகிசுக்கள் வெளியான சமயத்தில், ரஜினிகாந்த் லதாவை திருமணம் செய்திருந்தார். இதனால் அப்போது வெளியான இந்த தகவல் உண்மையா, இல்லையா என்று யாருக்கும் தெரியாது.