ஜீ தமிழில் இருந்து விஜய் டிவி பக்கம் பிரபல சீரியல் நடிகை- யார் பாருங்க
சீரியல்கள்
சின்னத்திரை கலைஞர்கள் ஒரே தொலைக்காட்சியில் தான் நடிப்போம் என இருக்க மாட்டார்கள். எந்த தொலைக்காட்சி தொடராக இருந்தாலும் சரி நல்ல கதாபாத்திரமாக உள்ளதா என பார்த்து நடிப்பார்கள்.
அப்படி இப்போது ஒரு நடிகை பற்றிய விவரம் தான் வெளியாகியுள்ளது.
அதாவது பிரபல நடிகை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இருந்து இப்போது விஜய் டிவி பக்கம் வந்துள்ளார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் பேய் சித்ரா என்ற கேரக்டரில் நடித்த யமுனாவை யாருமே மறந்திருக்க மாட்டார்கள். இந்த தொடர் மூலம் இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் கிடைத்தது.
வெயில் படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்தாலும் அது அந்த அளவுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் சீரியல்களில் நடிக்க தொடங்கியவருக்கு சின்னத்திரை மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது.
முதன்முதலில் இவர் அபூர்வ ராகங்கள் என்னும் சீரியலில் அறிமுகமானார், இதில் அவரது தங்கையும நடித்திருக்கிறார். சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்த இவருக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.
புதிய தொடர்
சமீபத்தில் விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்திருந்த யமுனா இப்போது விஜய்யில் ஒளிபரப்பாகும் புதிய தொடரில் நடிக்க இருக்கிறார். வீட்டுக்கு வீடு வாசல்படி என்ற புது தொடரில் தான் நடிக்கிறாராம்.
ஏற்கெனவே இந்த தொடரின் புரொமோ வெளியாகிவிட்டது.