மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கார்த்திக் ! வெளியான பரபரப்பு தகவல்
நடிகர் கார்த்திக் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகராக விளங்கியவர், திரையுலகில் இவரை அனைவரும் நவரச நாயகன் என்று தான் அழைப்பார்கள்.
இவர் தமிழ் சினிமாவிற்கு அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதனை தொடர்ந்து இவர் நடித்த பல திரைப்படங்கள் ஹிட்டானதால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக அப்போது விளங்கினார் கார்த்திக்.
மேலும் இவர் நடிப்பில் வெளியான உள்ளதை அள்ளித்தா, மேட்டுக்குடி, பிஸ்தா, உனக்காக எல்லாம் உனக்காக உள்ளிட்ட திரைப்படங்கள் 90'ஸ் கிட்ஸ்க்கு மிகவும் பிடித்த திரைப்படங்களாக உள்ளது.
அதுமட்டுமின்றி தற்போது அவரது மகனான கவுதம் கார்த்திக் தமிழ் திரையுலகில் கலக்கி வருகிறார், மேலும் கார்த்திக் அவரின் மகனுடன் சேர்ந்து MR.சந்திரமௌலி என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் கார்த்திக்கு ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை நடைப்பெற்று வருவதாக தகவல் வெளியாகி ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.