சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்த வீட்டை வாங்கிய பிரபல நடிகை
தோணியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பாப்புலர் ஆனவர் ஹிந்தி நடிகர் சுஷாந்ந் சிங் ராஜ்புட். அவர் கடந்த 2020 ஜூன் மாதத்தில் மும்பையில் இருக்கும் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் சர்ச்சையாகவே இருந்து வருகிறது. சுஷாந்த் பிணமாக கண்டெடுக்கப்பட்ட வீடு தற்போது வரை காலியாக தான் இருக்கிறது. அந்த வீட்டுக்கு குடிவர பயம் காரணமாக யாருமே முன்வரவில்லை.

வீட்டை வாங்கிய நடிகை
சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட வீட்டை தற்போது பிரபல நடிகை அடா ஷர்மா வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மும்பையின் பாந்த்ரா வெஸ்ட் பகுதியில் இருக்கும் அந்த duplex 4BHK அபார்ட்மெண்ட் சுமார் 2500 சதுர அடிக்கும் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
அடா ஷர்மா எவ்வளவு கொடுத்து வாங்கினார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

சந்திரமுகி 2 விழாவில் மாணவர் மீது தாக்குதல்.. மன்னிப்பு கேட்ட நடிகர் லாரன்ஸ்