நான் சினிமா குடும்பத்தில் பிறந்து இருந்தால் அப்படி நடந்திருக்கிறது! - நடிகை அடா ஷர்மா
நடிகை அடா ஷர்மா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து இருப்பவர்.
அவர் 1920 என்ற ஹாரர் படத்தில் தான் நடிகையாக அறிமுகம் ஆனார். தமிழில் சிம்புவின் இது நம்ம ஆளு, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் 2 ஆகிய படங்களில் நடித்து இருந்தார்.
வாரிசு நடிகைகள் பற்றி
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் Nepotism பற்றி பேசி இருக்கிறார். "நான் மட்டும் சினிமா குடும்பத்தில் பிறந்து இருந்தால் என்னை ஒரு ஹாரர் படத்தில் அறிமுகம் ஆக விட்டிருக்க மாட்டார்கள்." அடா சர்மா இப்படி பேசி வாரிசு நடிகைகள் ஈஸியாக பெரிய படங்களில் அறிமுகமாவதை அவர் கலாய்த்து இருக்கிறார்.
"மற்ற வாரிசு நடிகைகள் போல ஒரு ரொமான்டிக் படத்தில் நடித்து இருப்பேன். யாராவது முதல் படத்திலேயே கருப்பு பல் உடன் பேய் பிடித்தது போல நடிப்பார்களா."
"நான் 1920 படத்தில் நடித்ததை ஆடியன்ஸ் ஏற்றுக்கொண்டார்கள். அதனால் தான் என்னை இயக்குனர்கள் வித்தியாசமான ரோல்களில் நடிக்க வைக்கிறார்கள்" என அடா ஷர்மா கூறி இருக்கிறார்.




இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
