ஜுன் மாதம் வெளியாகப்போகும் அட்டகாசமாக தயாராகியுள்ள அடங்காதே திரைப்படம்

By Yathrika May 02, 2025 07:50 PM GMT
Report

ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் பேனரில் எம்.எஸ். சரவணன் தயாரிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அடங்காதே' திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன், ஜி.வி. பிரகாஷ் குமார், விநியோகஸ்தர் ஜி.என். அழகர்சாமி, ஃபைனான்சியர் பதம், இயக்குநர் திருமலை, தயாரிப்பாளர் ராஜராஜன், ஒளிப்பதிவாளர் பிரமோத், இயக்குநர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் படத்தை ஜூன் மாதம் வெளியிடுவது என முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்திற்கு வந்தவர்களை தயாரிப்பாளர் சரவணன் மற்றும் இயக்குநர் சண்முகம் முத்துசாமி வரவேற்றனர். 'அடங்காதே' ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.

இன்றைய அரசியலை விறுவிறுப்பாக இப்படம் பேசுகிறது. சுரபி நாயகியாக நடித்துள்ள 'அடங்காதே' படத்தில் பிரபல பாலிவுட் நடிகை மந்திரா பேடி முக்கிய பாத்திரத்தில் தோன்றுகிறார்.

யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோர் தங்கள் பங்களிப்பு மூலம் படத்திற்கு வலு சேர்த்துள்ளனர். அனைத்திற்கும் முத்தாய்ப்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கெளரவ வேடத்தில் நடித்துள்ளார். 'அடங்காதே' குறித்து பேசிய இயக்குநர் சண்முகம் முத்துசாமி, "இது ஒரு அரசியல் திரில்லர் ஆகும். சமகால அரசியல் குறித்து இப்படம் பரபரப்பாக விவரிக்கிறது.

இரு சக்கர வாகனங்களை ரிப்பேர் செய்யும் இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் குமாரும், அரசியல் தலைவராக சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரும் மிரட்டியுள்ளனர். கதையில் திருப்பம் ஏற்படுத்தும் முக்கிய வேடத்தில் நடித்துள்ள அண்ணன் சீமான் அவர்களுக்கு மிக்க நன்றி," என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "திருச்சியில் ஆரம்பிக்கும் கதை காசி வரை நீள்கிறது. தொடக்கம் முதல் முடிவு வரை ரசிகர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது.

ஜுன் மாதம் வெளியாகப்போகும் அட்டகாசமாக தயாராகியுள்ள அடங்காதே திரைப்படம் | Adangathae Movie Release Announcement

தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ள சூழ்நிலையில் வரும் ஜூன் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாவது மகிழ்ச்சி," என்று தெரிவித்தார். ஜி.வி. பிரகாஷ் குமாரே 'அடங்காதே' திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

ஒளிப்பதிவை பி.கே. வர்மா கவனிக்க, டி. சிவநந்தீஸ்வரன் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். கலை இயக்கத்திற்கு ஏ.ஆர். மோகனும், சண்டைப் பயிற்சிக்கு ராஜசேகரும், நடன இயக்கத்திற்கு தினேஷும், வடிவமைப்புக்கு 24 ஏஎம் டியூனி ஜானும் பொறுப்பேற்றுள்ளனர்.

பாடல் வரிகளை கபிலன், சாஹிதி, அருண்ராஜா காமராஜ், உமாதேவி, பார்வதி மற்றும் சிவகங்கா எழுத, உடைகளை சுஜித் வடிவமைத்துள்ளார். புரொடக்ஷன் கன்ட்ரோலர்: எம். செந்தில்; நிர்வாகத் தயாரிப்பு: எம். சுரேஷ் ராஜா, டி, ரகுநாதன்; ஸ்டில்ஸ்: தேனி முருகன்; மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US